காதல் திருமணம் செய்த பெண்.. கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுப்பட்ட முக்கிய குற்றவாளி கைது.!

 
மேட்டுபாளையத்தில் இளைஞர் கைது
இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவு வாலிபரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பெற்றோரை எதிர்த்து காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வீரபாண்டி ஜோதிபுரம் பகுதியைச்சேர்ந்த சிவனேஷ் பாபு(24) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நிர்வாணமாக 2 கிலோமீட்டர் நடந்த கொடூரம்

இதன் அடிப்படையில் சிவனேஷ் பாபு இளம்பெண்ணை ஓடந்துறை ராமசாமி நகர் பகுதியில் தனியே வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த இளம்பெண்ணும் அவருடன் சென்று வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணை மிரட்டி, தாக்கி சிவனேஷ் பாபு மற்றும் அவரது நண்பரான மெக்கானிக் ராகுல்(38) உள்ளிட்ட இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அப்பெண்ணை வெளியே பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று மெக்கானிக் ராகுலின் நண்பர் செந்தில்குமார் (35) என்பவரை புரோக்கராக பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கும் விருந்தாக்கி உள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ;காணொலியில் முதல்வர் திறந்து  வைத்தார் | | Dinamalar

ஒருகட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பி வந்த இளம்பெண் தனது உறவினர்களுடன் சென்று மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மெக்கானிக் ராகுல் மற்றும் புரோக்கர் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான சிவனேஷ் பாபுவை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

From around the web