தண்டவாளத்தில் படுத்து தூங்கிய பெண்... நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. திக் திக் வீடியோ!
பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் லோகோ பைலட் திடீரென ரயிலை பாதியில் பிரேக் அடித்து நிறுத்தினார். தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார்.
A girl reached Motihari's Chakia railway station to commit su!cide and fell asleep on the railway track while waiting for the train, Train Driver saved the girl's life by applying emergency brakes, Bihar
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 10, 2024
pic.twitter.com/Jrg1VqjG2s
இதனால் அவர் அவசர பிரேக்குகளை போட்டு பாதியில் ரயிலை நிறுத்திய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கி அங்கு சென்று பார்த்தனர். ரயில் தண்டவாளத்தில் அந்தப் பெண் அசந்து தூங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை எழுப்பி விசாரணை நடத்தினர். அப்போது தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக பெண் கூறியுள்ளார்.தன்னுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்திற்கு வந்ததாகவும், எப்போது ரயில் வரும் என்று நினைத்து தண்டவாளத்தில் படுத்திருந்த நிலையில் அப்படியே அசந்து தூங்கியதாகவும் தெரிவித்தார்.
தன்னை எதற்காக காப்பாற்றினீர்கள். நான் உடனே சாகவேண்டும் எனக் கூறி அந்தப் பெண் கதறி அழுதார். அதோடு தன் குடும்பத்தினரால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இ்ச்ம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்
