விபத்தில் சிக்கி கைக்குழந்தையுடன் தவித்த பெண்.. நெகிழ வைத்த எஸ்.பி.. குவியும் பாராட்டுக்கள்!

 
பெண்

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர்களுடன் அப்பெண்ணின் மாமியாரும் சென்றுள்ளார்.

நாகை நோக்கி ஆட்டோ சென்ற போது, புத்தூர் ரவுண்டானா அருகே எதிரே வந்த பைக் மீது ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆட்டோ சேதமான நிலையில், ஆட்டோவில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். எனினும் அவர்கள் ஆட்டோவில் சிக்கியதால் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டனர்.

பெண்

கைக்குழந்தை, அவரது தாய், பாட்டியை முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ்க்கு அழைத்தனர். இதனால் ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்கள் அங்கேயே காத்திருந்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை பார்த்து விசாரித்துள்ளார்.

பெண்

அப்போது கைக்குழந்தையுடன் பெண் நிற்பதை அறிந்து, உடனடியாக தனது காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து நடந்தவற்றை கேட்டறிந்தார். குழந்தையை வாங்கி சிறிது நேரம் வைத்திருந்தார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் குழந்தையையும் தாயையும் காவல்துறை ரோந்து வாகனத்தில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

இச்செயலால் காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web