காதலுக்கு நோ சொன்ன இளம்பெண்.. ஆத்திரத்தில் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் அதிரடியாக கைது!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஜெயந்தி என்பவரும் இவரது மகளும் (வயது 20) வசித்து வருகின்றனர். அதே பகுதியில் மாதவன் மகன் பாலாஜி (வயது 20) கடந்த சில மாதங்களாக ஜெயந்தியின் மகளை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

இருப்பினும், அவர் பின்னால்  தொடர்ந்து சென்று காதலிக்குமாறு துன்புறுத்துகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயந்தியும் அவரது மகளும் வீட்டில் இருந்தபோது, வீட்டுக்கு சென்ற பாலாஜி, அந்த பெண்ணை பார்த்து ஏளனமாக பேசினார். இதைனை தட்டிக்கெட்ட அவரது தாயார் ஜெயந்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும், ஜெயந்தியை பார்த்து, என் வழியில் தலையிடாவிட்டால் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவேன் என்று வாலிபர் மிரட்டினார்.

இதையடுத்து, திருத்தணி காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த கிராமத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web