அதிர்ச்சி... ரூ1000 தர்றேன் வர்றியா... குடும்பப் பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த இளைஞர்!

 
குடும்பப் பெண்

 சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம், வரவனை பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ்குமார். இவர் கரூரில் அமைந்துள்ள  வேம்பு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நல்லதங்கால் ஓடை தெருவில் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  சதீஷ்குமார் கரூர் மினி பேருந்து நிலையத்தில் உள்ள பெண்மணி அளிக்கும் தகவலின் பெயரில் மாதம் ஒருமுறை அந்த வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.  

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்
இன்றும் வழக்கம் போல் கரூர் வந்த சதீஷ்குமார் மது போதையில் இருந்துள்ளார். நிதானம் இன்றி  சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு செல்லாமல் அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள வீட்டின் கதவை தட்டியுள்ளார். மது போதையில் அங்கிருந்த பெண்மணியிடம் தான் வந்த விஷயத்தை சொல்லி ரூ1000 வழக்கமாக வந்து செல்லும்போது கொடுப்பதாகவும் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பெண்மணி கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். அவரை  மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.  

பாலியல் பலாத்காரம்


இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து, அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கரூரில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் பாலியல் தொழில் நடப்பதால், அடிக்கடி இதுபோல் பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web