பகீர்... சாலை விபத்தில் மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்!

கோவையில் வசித்து வருபவர் 20 வயது இளம்பெண். இவர் கல்லூரிக்கு தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அவர் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்றபோது அங்கு சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் ஸ்கூட்டர் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி அந்த வழியாக வந்த ஒரு இளைஞரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, ஸ்கூட்டரில் வந்த இளைஞரிடம் சிரித்தபடி மன்னித்து கொள்ளுங்கள் எனக் கூறி விட்டு சென்றதாக தெரிகிறது.
உடனே அந்த இளைஞர் விபத்தை மறந்து அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் ஸ்கூட்டரின் முன்சென்று, தடுத்து நிறுத்தி சற்றும் எதிர்பாராத வகையில், அந்த மாணவியின் கையை பிடித்து, கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அந்த மாணவி, குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்தது கோவைப்புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் முகமது செரீப் என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவி, சம்பவம் நடந்த போது சிரித்தபடி பேசியதால், அதை தவறாக எடுத்துக்கொண்ட அவர், பின்தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டதும் தெரியவந்தது. போலீசார் முகமது செரீப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!