திக்குமுக்காடிய இளைஞர்... திடீரென வங்கிக் கணக்கில் ரூ.3,500 கோடி டெபாசிட்!

 
சூப்பர் மார்க்கெட் 3500 கோடி

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருப்பூணித்துறை பகுதியைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுமேஷ்குமார், தனது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.3,500 கோடிக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்.

சுமேஷ்குமாரின் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது எனச் சோதித்துப் பார்த்தபோது, தனியார் வங்கி ஒன்றின் மூலம் இந்தத் தொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது.

கோடிக்கணக்கான ரூபாயைக் கணக்கில் கண்டவுடன் ஆரம்பத்தில் வியப்படைந்தாலும், இதனால் எதிர்காலத்தில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் வருமோ என்று அஞ்சிய அவர், உடனடியாக வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்தார்.

வங்கி அதிகாரிகளின் தீவிர பரிசோதனைக்குப் பிறகு, இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என்பது கண்டறியப்பட்டது. உடனே அந்தத் தவறு சரிசெய்யப்பட்டு, வரவு வைக்கப்ப்ட்ட தொகையை வங்கி நிர்வாகம் அன்றைய தினமே மீட்டெடுத்தது.