பகீர் சிசிடிவி காட்சிகள்... ரயில் தண்டவாளத்தில் காரை நிறுத்திய இளைஞர்!

 
கார்

கர்நாடக மாநிலத்தில்   கோலார் மாவட்டத்தில் தியாகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ராகேஷ் என்ற இளைஞர்  மது போதையில் காரை ஓட்டி வந்த நிலையில் அவர்   ரயில்வே தண்டவாளத்தில் காரை நிறுத்திவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரயில்வே போலீசார்  உடனடியாக வந்து கிரேன் மூலமாக காரை அங்கிருந்து வெளியே எடுத்தனர். மேலும் இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தேக்கல் ரயில் நிலையம் ஒரு முக்கிய சந்திப்பாகும். மேலும் இந்த பாதையில் பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்த நேரத்தில் எந்த ரயில்களும் வரவில்லை. ஏதேனும் ரயில் வந்திருந்தால், ஒரு பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கலாம்.  இந்த சம்பவத்தில் சிக்கிய மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார், பிளாட்பாரப் படிகளில் இருந்து விழுந்து ரயில் தண்டவாளத்தில் சாய்ந்தது. பீதியடைந்த ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  

உத்தரபிரதேச போலீஸ்

உடனடியாக அவர்கள் ஜேசிபியைப் பயன்படுத்தி காரை அகற்றினர். இந்தக் கலவரத்தை உருவாக்கிய நபர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரயில்வே போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்த போது அவர்  குடிபோதையில் இருந்ததாக தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web