அதிகாலையில் இளைஞர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்!

 
கோவில்பட்டி
 

இன்று அதிகாலை கோவில்பட்டி அருகே செண்பகப்பேரி கிராமத்தில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில்பட்டி அருகே செண்பகப்பேரி கீழத் தெருவைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் பாண்டியராஜ் (25). கட்டிட வேலை செய்து வரும் இவர், இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பாண்டியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

நடைபயிற்சிக்கு சென்றிருந்த பாண்டியராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடிச் சென்று பார்த்த போது, கண்மாய் கரையோரம் அவர் சடலமாக ரத்தவெள்ளத்தில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பாண்டியராஜ் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web