என்னையா படம் புடிக்கிற.... போலீசாரின் கையை கடித்த இளைஞர்... பரபரப்பு வீடியோ !

 
போலீசின் கையை கடித்த இளைஞர்

சாலையில் போக்குவரத்து போலீசார்  வாகனங்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது அதனை ஒழுங்குபடுத்தவும் , முறையின்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் கர்நாடகமாநிலம்   பெங்களூருவில் நேற்று பிற்பகலில்   போக்குவரத்து காவலர்கள் வழக்கமான வாகன சோதனையில் ஈட்டுப்பட்டிருந்தனர்.


அப்போது ஹெல்மெட் அணியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தினர். அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்ய அவரை புகைப்படம் எடுத்தனர். உடனே ஆத்திரமடைந்த வாகனஓட்டி இளைஞர்  போலீசாரின் கையை பிடித்துக் கடித்துள்ளார்.அருகில் இருந்த மற்றொரு போக்குவரத்து காவலர் இளைஞரின் இந்த செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

போலீசின் கையை கடித்த இளைஞர்

இந்த பதிவு தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இத்துடன் அவர் மீது   பணியில் இருந்த போக்குவரத்து காவலரைத் தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும்   அந்த இளைஞரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web