மாஸ் வீடியோ.. நான் நீதிபதியின் மகன்.. டிராபிக் போலீசிடம் உதார் காட்டிய இளைஞர்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
லக்னௌ

உத்தரப்பிரதேச மாநிலம்  பார்க்கிங்கிற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் பார்க்கிங்  செய்பவகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.   இளைஞர் ஒருவர் தனது காரை அனுமதியில்லாத இடத்தில் பார்க்கிங் செய்துள்ளார். அந்த காரில் மாவட்ட நீதிபதி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இருப்பினும் அந்த கார் அனுமதியில்லாத இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததால், டிராபிக் போலீஸார் அதனை  அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி வைத்தனர்.  


 

காரின் உரிமையாளர் மகன்  ரூல்ஸ் எனன்னன்னு எனக்குத்  தெரியும். உடனே எனது காரை விடுவிக்கவில்லை எனில்  தேவையால்லாத பிரச்சினை  வரும்' என மிரட்டல் விடுத்துள்ளனர்.  அவரது பேச்சை காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை.  அப்போது குறுக்கிட்ட அந்த இளைஞர்  காவல் நிலையத்தில் வைத்து உங்கள் கன்னத்தில் அறை விழுந்தால் தான் காரை கொடுப்பீர்கள் என ஆவேஎசமாக  கூறியுள்ளனர். 

போலீஸ்


இதைக் கேட்ட காவல்துறையினர் யாருக்கு வேண்டுமானாலு நாங்களே போன் போட்டுதருகிறோம். தாராளமாக  பேசுங்கள் என  பதில் கூறினர்.  அந்த இளைஞர் பதில் பேசாமல் அபராதம் கட்டிவிட்டு  அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். அதையடுத்து நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக அவருக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இதற்கான ரசீதும்  கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த செயல் பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web