இரவு 2 மணி வரை திரையரங்குகள் செயல்பட அனுமதி?! திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!!

 
நாளை முதல் திரையரங்குகள் 100 சதவிகிதம்  பார்வையாளர்களுடன் அனுமதி!!

 இன்று ஜூலை 21ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் , தமிழ்நாடு திரைப்பட  விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும்  தமிழ்த் திரைப்படத்  தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக இணைந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பில் திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடும் நேரத்தை இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன்  திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் 8 சதவீத local body tax-ஐ நீக்க வேண்டும் , ஒரே ஒரு திரையுடன் இருக்கும் பெரிய திரையரங்கங்கள் 4 திரைகள் வரை  அதிகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்,

திரையரங்க உரிமையாளர்கள்சங்கம்

தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு   வரிச்சலுகை வழங்க வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.  இது குறித்து அவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில் “திரையரங்கங்களில் ரூ.100 வரையிலான டிக்கெட்களுக்கு  12% வரியும் , 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18% வரியும் ஜிஎஸ்டியாக விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன்  கூடுதலாக 8 விழுக்காடு வரி  அதாவது  உள்ளாட்சி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான வரியை உடனடியாக நீக்க ஆவண செய்ய வேண்டும். இந்த 8 விழுக்காடு வரி குறைக்கப்பட்டால் டிக்கெட் விலையும் 8 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.  அத்துடன்  திரையரங்கங்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை  காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை நீட்டித்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் முன்பு 4000 திரையரங்குகள் இருந்தன். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 1000 திரையரங்குகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.    

ஸ்டாலின்

1000 இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளில் கூட தற்போது 100, 150 பார்வையாளர்கள்தான் வருகின்றனர் . எனவே ஒரேயொரு திரையுடன் உள்ள பெரிய திரை மட்டும் கொண்டுள்ள திரையரங்குகளை,  நான்கு திரைகள்  கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அனுமதி அளிக்க வேணுட்ம்.   ஒரு திரையை 3, 4 திரைகளாக மாற்றினால் சிறுபட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கலாம்.    கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியமும் ,  வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு அது நீக்கப்பட்டு விட்டது.  இதன் அடிப்படையில் மீண்டும் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம் , வரிச்தலுகையை  வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம் ,   பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர்  உறுதி அளித்துள்ளார். அத்துடன்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்  சங்கம் சார்பில்  7 நாட்கள்  கொண்டாடவும் முதல்வர்  அனுமதி வழங்கியுள்ளார்.” எனக் கூறியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web