சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: ‘டம்மி முதலமைச்சர்’ என உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
Oct 27, 2026, 13:50 IST
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒருபுறம் குழந்தைகள் மாயமாவதாகவும், மறுபுறம் சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதாகவும் கூறி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை ‘டம்மி முதலமைச்சர்’ என விமர்சித்துள்ளார்.

தேக்கம்பட்டி சிறையிலிருந்து அக்.26 இரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
