தேனி: கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

 
தேனி கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பிரபல சுற்றுலாத் தலமான கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கும்பக்கரை

பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.

கும்பக்கரை அருவி

அருவியில் நீர்வரத்து முழுமையாகக் குறையும் வரை இந்தத் தடை தொடரும் என்பதால், அப்பகுதிக்குச் சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாமல் இருக்க வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.