12,256 காலிப் பணியிடங்கள்... CGL தேர்வுக்காக புதுச்சேரியில் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
Aug 18, 2026, 07:10 IST
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு நடைபெறுவதையொட்டி, புதுச்சேரியில் தேர்வு மையங்களாகச் செயல்படும் 69 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

CGL தேர்வுகள் நடைபெறவுள்ளதால் புதுச்சேரியில் உள்ள 69 பள்ளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் தடையின்றி நடைபெற வசதியாகப் பள்ளிகள் தேர்வு மையங்களாகச் செயல்படவுள்ளன.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள குரூப் “பி” மற்றும் குரூப் “சி” பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த CGL தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்புத் தேர்வின் மூலம் நாடு முழுவதும் சுமார் 12,256 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
