2,140 வேட்பாளர்கள்... 3 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு... அதிகாலையிலேயே ஆர்வமுடன் குவியும் வாக்காளர்கள்!

 
தேர்தல் வாக்குப்பதிவு தேர்தல் வாக்குப்பதிவு

இகளத்தில் 2,140 வேட்பாளர்கள் உள்ளனர். 

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில் இன்று ஏப்ரல் 9ம் தேதி கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போன்று கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவாவின் இடைத்தேர்தல் நீதிமன்ற உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கேரளா அசாம்

இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 296 எம்.எல்.ஏ பதவிகளுக்கு 2,140 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மாநிலம்

வேட்பாளர்கள் எண்ணிக்கை

சட்டமன்றத் தொகுதிகள்

கேரளா

985 பேர்

140 தொகுதிகள்

புதுச்சேரி

366 பேர்

30 தொகுதிகள்

அசாம்

789 பேர்

126 தொகுதிகள்

தேர்தல் கேரளா

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கேரளாவில் இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.

அசாமில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக-வும், அதனைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன.

இன்று காலை 7 மணிக்கு இந்த 3 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் அதிகாலை முதலே வாக்களிக்க தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு வாக்களிக்க வந்திருக்கும் கேரள மக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.