30,041 பணியிடங்கள்... 10வது முடிச்சவங்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு! எழுத்து தேர்வு கிடையாது!

 
வேலை வாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அஞ்சல் துறையில், 10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நாடும் முழுவதும் அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும்  2994 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விட வேண்டாம்.

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதே போன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

குறைந்தபட்ச வயது - 18,  அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

அஞ்சல்

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2023 ஆகும். குறைந்த கல்வி தகுதியில் அதிகபட்சம் 24 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கக்கூடிய இந்த பணியிடத்தை தவறவிடாமல் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web