புள்ளிங்கோஸ் அட்டகாசம்.. புதிய மேம்பாலத்தில் தொடரும் கோர விபத்துக்கள்..!
மதுரை-நத்தம் மேம்பாலம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.மேம்பாலத்தில் அதிக வேகத்தில் பைக் ரேஸர்கள் செல்வதால், மெதுவாக செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நத்தம் மேம்பாலத்தில் வாகனங்களை இயக்க அச்சப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், நத்தம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் பைக்குகளுடன் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையும் மீறி, நாளுக்கு நாள் மேம்பாலத்தில் பைக் ரேஸர்களின் அதிவேகத்தால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இருந்தும், மேம்பாலத்தில் பைக் ரேஸர்கள்கள் அதிவேகமாக செல்வதால், நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய அதிக வேகத்தில் செல்லும் பைக் ரேசர்கள், ஆர்வம் காட்டி வருகின்றனர். பைக் ரேஸர்கள் காரணமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால், மெதுவாக செல்லும் வாகன ஓட்டிகள் பதற்ற நிலையில் பயணித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!