இன்னும் 2 நாள் தான் டைம்... செப்.30 கடைசி தேதி... குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்த குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்!
இன்னும் 2 நாள் தான் இருக்கு. செப்டம்பர் 30 கடைசி தேதி. மிஸ் பண்ணாதீங்க. சென்னை குடிநீரக வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய நடப்பாண்டிற்கான முதல் அரையாண்டு வரி மற்றும் கட்டணங்களை விரைவில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2026-27-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகையை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login முகவரியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகத் தங்களது கட்டணங்களை எளிதில் செலுத்தலாம்.
இணையவழியைத் தவிர்த்து, காசோலை, வரைவோலை, இ-சேவை மையங்கள், யு.பி.ஐ., கியூ.ஆர். குறியீடு, பி.ஓ.எஸ். மற்றும் ஐ.பி.ஓ.எஸ். போன்ற பல்வேறு கட்டண முறைகளைப் பயன்படுத்தியும் நுகர்வோர்கள் தங்களின் வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
