“விஜய்யுடன் எப்போதும் கூட்டணி கிடையாது... புதியவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியாது!” - நிதின் நபின்

 
விஜய் நிதின் நபின் விஜய் நிதின் நபின்

தமிழக அரசியல் களம் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பில் இருக்க, தேசிய அளவில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அந்தத் தொகுதியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அளித்துள்ள பேட்டி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தவெக விஜய்

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவேளை தேவைப்பட்டால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் பாஜக கூட்டணி அமைக்குமா?” என்ற கேள்வியை நிதின் நபினிடம் எழுப்பிய நிலையில், இந்தக் கேள்விக்குத் துளியும் தயக்கமின்றி பதிலளித்த நிதின் நபின், "அரசியல் களத்திற்குப் புதியவரான விஜய்யால் இந்தத் தேர்தலில் பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் (Impact) ஏற்படுத்த முடியாது. அரசியலில் உடனடியாக வந்து வெற்றி பெற்றுவிட முடியாது."

"எங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. பாஜக தனித்துத் தனது பலத்தை நிரூபிக்கும். ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன், விஜய்யுடன் 'எப்போதும்' கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை."

தவெக விஜய்

தமிழகத்தில் பாஜகவும், தவெக-வும் ஒரே விதமான 'வெள்ளை - காக்கி' உடை மற்றும் சில கொள்கை ரீதியான ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், நிதின் நபினின் இந்தத் திட்டவட்டமான பதில் அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தவெக ஒரு தன்னிச்சையான சக்தியாக உருவெடுப்பதைக் காட்டிலும், அது பாஜகவின் வாக்குகளைப் பிரிக்கும் காரணியாக இருக்கும் எனப் பல அரசியல் ஆய்வாளர்கள் கருதும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.