நைட் கிளப்பில் பரபரப்பு... பொதுமக்களை பணயக் கைதியாக சிறைப்பிடித்த மர்ம நபர்!

 
நெதர்லாந்த் பார்

நெதர்லாந்தின் நகரமான ஈடேயில் உள்ள பெட்டிகோட் பார் என்ற இரவு விடுதியில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் பலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளார். போலீசார் அங்கு சென்று பிடிபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 150 வீடுகளில் வசித்த மக்களை அவர்களது பாதுகாப்புக்காக அப்பகுதியில் இருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர்.


இந்நிலையில், 3 பேரை மட்டும் விடுவித்துள்ளதாகவும், இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது பெட்டிகோட் பார் இரவு விடுதி அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டலுக்குள் அனுப்ப ரிமோட் கண்ட்ரோல் ரோபோவை போலீசார் கொண்டு வந்துள்ளதாகவும், வெடிபொருள் தடுப்பு பிரிவுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், Ede city செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈடே மேயர் இது பற்று கூறுகையில், "கைதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். எனது கவலையும் எண்ணங்களும் அவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் செல்கிறது. நிலைமை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web