இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. பத்திரம் மக்களே.. குடையோடு கிளம்புங்க!
Oct 12, 2026, 08:00 IST
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காலநிலைப் மாற்றம் காரணமாகத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று அக்டோபர் 12ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை மற்றும் திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பரவலாக அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
