இன்று முதல் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. கொள்முதல் நிறுத்தம்! 3000 சங்கங்கள் பங்கேற்பு! பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!

 
ஆவின் பால்

பால் வளத்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இன்று முதல் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் இன்று  முதல் பால் கொள்முதல் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர்,  பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னரும் பேச்சுவார்த்தை சுமூகமான தீர்வை எட்டாததால், இன்று முதல் கிராமங்களில் பால் கொள்முதல் படிப்படியாக குறையும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆவின்

தினந்தோறும் கிராமப்புறங்களில் இருந்து 27.50 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறோம். இதில் 25 லட்சம் லிட்டர் பால் ஆவின் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் இனிப்பு உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கொள்முதல் விலையை உயர்த்தி தராததால் இன்று முதல் தினந்தோறும் 50,000 முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் படிப்படியாக குறைக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களில் 10 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் தமிழ்நாடு அரசுக்கு குறையும். மீதம் உள்ள பால்களை தேவைப்படுவோருக்கு விற்று விடுவோம் என்று தெரிவித்தார்.

ஒரு லிட்டருக்கு அரசு 35 ரூபாய்க்கு கொள் முதல் செய்கிறது. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் 47 ரூபாய் வரையில் கொள்முதல் செய்கின்றன. இதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக உள்ள தனியார் நிறுவனத்திற்கு பாலை வழங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு!

இன்று நடைபெறும் பால் நிறுத்தப் போராட்டத்தில் 3000 சங்கங்கள் மூலம் 25 சதவீதம் பேர் கருப்புக் கொடியுடன் பங்கேற்கின்றனர். என தெரிவித்தார். பால் கொள்முதல் நிறுத்தப்பட்டால், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் முழுவதும் பாதிக்கப்படும். மேலும், அவர்களது கோரிக்கையை ஏற்று  கொள்முதல் விலையை அதிகரித்தால், ஆவின் பாலின் விலை உயர்த்தப்படும். தனியார் பால் நிறுவனங்கள் அடுத்தடுத்து விலையை உயர்த்தியும் ஆவின் நிறுவனம் அதே விலையில் தருவது குறிப்பிடத்தக்கது.
 

From around the web