"பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை.. ஈரான் கலந்துக் கொள்ளாது" - அதிகரிக்கும் போர் பதற்றம்!

 
அமெரிக்கா ஈரான் அமெரிக்கா ஈரான்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடனான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைக்காகத் தனது தூதுக்குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பத் தயாராகி வந்த நிலையில், ஈரான் அதனை மறுத்துள்ளது. அமெரிக்காவின் "அளவுக்கு அதிகமான கோரிக்கைகள்" மற்றும் "யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்" காரணமாகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை மற்றும் சமீபத்தில் ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கப் போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்திக் கைப்பற்றியது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அமெரிக்கா தனது முற்றுகையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் எனத் தெஹ்ரான் (ஈரான்) தெரிவித்துள்ளது.

ஈரான் அணு

அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "நாளை இரவு" அமெரிக்கப் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்திற்குச் செல்வார்கள் என்று பதிவிட்டிருந்தார். துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குவதாக இருந்தது.

"நாங்கள் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை வழங்குகிறோம், அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்" என்று டிரம்ப் கூறியிருந்தாலும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மறைமுக மிரட்டலையும் அவர் விடுத்துள்ளார்.

ஈரான் அமெரிக்கா

பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இரண்டு வார கால போர் நிறுத்தம், இன்னும் இரண்டே நாட்களில் (ஏப்ரல் 22) முடிவடைகிறது. ஈரான் போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.