தேர்வு கிடையாது.. சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகளுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணல் முறையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 82 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மருத்துவ அலுவலர், செவிலியர், ஓட்டுநர், இதர பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்ப 8-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, நர்சிங் படிப்பு, பி.காம் அல்லது எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி வாரியாக விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குப் பணிக்குத் தகுந்தாற்போல் மாதச் சம்பளமாக ₹11,000 முதல் ₹63,000 வரை வழங்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்வி மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, நேரிய முறையில் அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி: மதுரை மாவட்ட சுகாதார அலுவலகம் (District Health Office, Madurai). விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24.07.2026
மதுரையில் அரசு மருத்துவத் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட இறுதி தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
