இந்தியாவில் காண்டமே கிடையாது... விலையும் உயர்வு - போர் எதிரொலியால் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு!

 
காண்டம் ஆணுறை காண்டம் ஆணுறை

 சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாகப் போக்குவரத்து மற்றும் மூலப்பொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் ஆணுறைகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆணுறைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில முக்கிய மூலப்பொருட்களின் விலை சர்வதேசச் சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது:

ஆணுறை தயாரிப்பில் மசகுப் பொருளாக பயன்படுத்தப்படும் சிலிகான் எண்ணெய் இறக்குமதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் தட்டுப்பாட்டால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. லேடெக்ஸ் எனப்படும் இயற்கை ரப்பரைப் பதப்படுத்த அமோனியா அவசியமானது. போரினால் அமோனியா விநியோகம் தடைபட்டுள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது.

ஆணுறை

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகள் வழியாக வரும் சரக்குக் கப்பல்களின் வாடகை மற்றும் காப்பீட்டுத் தொகை பலமடங்கு உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் ஆணுறைகளின் சில்லறை விற்பனை விலை 10% முதல் 15% வரை உயரக்கூடும் என உற்பத்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள் மருந்தகங்களில் தட்டுப்பாடாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பிரீமியம் வகை ஆணுறைகளின் விநியோகம் ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசமாக வழங்கும் குடும்பக் கட்டுப்பாடு சாதனங்களின் கொள்முதல் விலையும் இதனால் அதிகரிக்கக்கூடும்.

அட கருமம்! அவசரத்துக்கு ஆணுறை கிடைக்கலை! காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் நீடிப்பதால், இது போன்ற பல அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த தயாரிப்புகளின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொது சுகாதாரத் திட்டங்களில் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.