இன்று விடுமுறை கிடையாது... தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும்!

 
ரேஷன்

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டுத் தொடர் விடுமுறை வர உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருள்களைச் சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று அக்டோபர் 18, ஞாயிறு அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

ரேஷன் கடை

பொதுவாகத் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடர் பண்டிகை விடுமுறை நாள்களில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் தடைபடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் சர்க்கரை

இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதற்குப் பதிலாக, வரும் நவம்பர் 21-ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு ஈடுசெய்யும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கையால், பண்டிகைக் காலத்திற்குத் தேவையான பொருட்களைப் பொதுமக்கள் எந்தவிதத் தடையுமின்றி எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.