5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது... ஏமாற்றத்தில் மக்கள் அதிர்ச்சி!

 
நகைக்கடன் தங்கம் நகைக்கடன் தங்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளி வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, கடந்த காலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய '5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி' குறித்த அறிவிப்பு இந்த முறையும் வரும் எனப் பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியாகி மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவங்களும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால், அவற்றில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான எந்தவொரு வாக்குறுதியும் இடம்பெறவில்லை. இது கடன் சுமையில் இருப்பவர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

நகைக்கடன்

நாம் தமிழர் கட்சி கொள்கை ரீதியாக இதுபோன்ற இலவச வாக்குறுதிகளைத் தாங்கள் வழங்கப் போவதில்லை என்பதில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே உறுதியாக உள்ளது.

மற்ற கட்சிகள் கைவிட்ட நிலையில், 'புதிய அரசியல்' பேசும் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் இதைப் பற்றிப் பேசுவார் எனப் பலர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான தவெக அறிக்கையிலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

"தேர்தல் நேரத்தில் எப்படியும் தள்ளுபடி வரும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், எந்தக் கட்சியுமே இதைக் கண்டு கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது" என இல்லத்தரசிகளும் சாமானிய மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தங்களுக்கு இந்தத் தள்ளுபடி ஒரு பெரிய ஊக்கமாக இருந்திருக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

நகைக்கடன்

அரசியல் கட்சிகள் நகைக்கடன் தள்ளுபடியைத் தவிர்த்திருப்பது, மாநிலத்தின் நிதி நிலைமையைச் சீரமைக்கும் முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், வாக்காளர்களின் மனநிலையில் இது எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தான் பார்க்க வேண்டும்.