’இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான்'.. அவர் தான் காரணம்.. மேடையில் பரப்பை கிளப்பிய மிஷ்கின்!

 
மிஷ்கின்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து, தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாடல் ராதா' திரைப்படம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மது மற்றும் இளையராஜா பற்றி இயக்குனர் மிஷ்கின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மிஷ்கின் கூறுகையில், "மது அருந்துவது ஒரு நிலை. மிகவும் வருத்தத்தில் இருப்பவர்கள் மது அருந்துகிறார்கள். பின்னர் அவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள். நானும் ஒரு பெரிய குடிகாரன் தான். ஆனால், எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கிறது. அதை விட பெரிய போதை எனக்கு இருக்கிறது, அதுதான் சினிமா. இயக்குனர் குரோசாவா எனக்கு ஒரு பெரிய போதை. அதை விட  ஒருத்தன் இருக்கான், இளையராஜா.

அவன் எனக்கு ஒரு பெரிய போதை. பலரை குடிகாரனாக மாற்றியவர் அவருதான்" என்றார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பல நெட்டிசன்கள் மிஷ்கின் மேடையில் மரியாதை இல்லாமல் பேசியதற்காக விமர்சித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!