மோடி ஐயா உங்களுக்கு எங்க ஓட்டு வேணாமா?.. மண்டை ஓட்டுடன் விவசாயிகள் சாலை மறியல்..!

 
விவசாயிகள் போராட்டம்

விளை பொருட்களுக்கு போதிய விலை வழங்க வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்தியா ஒரு ஜனநாயக நாடு, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், அனைவரும் சுதந்திரமாக இருக்கும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா?

வந்துட்டாரு அய்யாக்கண்ணு! டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு திருச்சி மொபைல்  டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் | Farmers led by Ayyakannu in Trichy in support of  the farmer's ...

அரசு ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அள்ளி கொடுக்கும் இவர்கள் 140 கோடி மக்கள் தொகையில் 90 கோடி விவசாயிகளுக்கு மட்டும் எந்த உதவியும் செய்யாமல் இருப்பது நியாயமா? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பெருமைக்குரியது. 90 கோடி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் ஏமாற்றுவது நியாயமா?

கையில் மண்டை ஓடு, ரோட்டில் படுத்தும், டவரில் ஏறியும் ஆர்ப்பாட்டம்: டெல்லி  போராட்டத்திற்கு திருச்சி விவசாயிகள் ஆதரவு

மோடி ஐயா அவர்களே விவசாயிகள் ஓட்டு உங்கள் கட்சிக்கு வேண்டாமா அல்லது ஓட்டு இயந்திரத்தை மாற்றி ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற எண்ணமா என எண்ணி மண்டை ஓட்டுடன் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் சிலர் திடீரென அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web