தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை - அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி - தாம்பரம் அசோக சின்னம் விவகாரம் குறித்து விளக்கம்!

 
மின் நிர்மல்குமார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் தாம்பரம் மாநகராட்சி விவகாரம் குறித்து முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை என்று தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதால் மின்சாரத்தின் தேவை வெகுவாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஒரு யூனிட் மின்சாரம் தோராயமாக ரூ.20-க்கு வாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே தற்போதைய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம் என்றும், இன்றைய நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி மேலும் குறைந்ததால் பொதுத் தொகுப்பிலிருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தாம்பரம் மாநகராட்சியில் அசோக சின்னம் சிலை அமைக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட அமைச்சர் என்ற முறையிலேயே அந்தச் சிலையைச் சரத் திறந்து வைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.