இந்த 3 ராசிக்காரர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனமும், நிதானமும் தேவை... செல்வத்தை பத்திரப்படுத்துங்க!

 
ராசி

இன்று ஆவணி மாதம் 16ஆம் நாள், மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளாகும். ஜோதிட ரீதியாகக் கிரக நிலைகளின் தாக்கத்தால் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பார்க்கலாம் வாங்க:

மேஷம்
இன்று உங்களுக்குப் பலவிதத்திலும் அனுகூலமான நாளாக அமையும். உங்களது ஆரோக்கியம் மேம்படுவதோடு, நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்று, அதன் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் உங்களுடைய திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

ரிஷபம்
முக்கியமான பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதன் மூலம் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகள் அல்லது திட்டங்களை வெற்றிகரமாகத் தொடங்குவதற்கு உகந்த நாளாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி லாபத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பதற்கான வாய்ப்புகள் வரும்.

மிதுனம்
பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் புதிய உத்திகளைக் கையாளும் நாள். அலுவலகத்தில் உங்களின் புதிய அணுகுமுறை உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும். நீண்ட நாளாக நிலுவையில் இருந்த சொத்து அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகள் கை கூடிவரும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

கடகம்
இன்று உங்களுக்குச் சற்று பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் முறையான ஓய்வு அவசியம். சக பணியாளர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துச் செயல்படுவது நல்லது. சட்ட ரீதியான விவகாரங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். குருவின் அருள் காரணமாகப் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்
கடந்த சில நாட்களாக உங்களை வாட்டிய தடை மற்றும் தாமதங்கள் விலகும். உங்களது ஆளுமைத் திறன் பணியிடத்திலும் சமூகத்திலும் நற்பெயரைக் பெற்றுத் தரும். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் உங்களின் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

கன்னி
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பொருளாதார ரீதியாகச் சுதாரிப்புடன் செயல்பட்டு, வரவு-செலவுத் திட்டத்தைப் பின்பற்றுவது நல்லது. எந்தவொரு புதிய முதலீட்டையும் அல்லது முக்கிய முடிவுகளையும் இன்று தவிர்ப்பது நன்த்தைத் தரும்.

துலாம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த ஸ்திரத்தன்மை இல்லாத நிலை மாறி, முன்னேற்றமான சூழல் உருவாகும். ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெற ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

லட்சுமி நாராயண யோகம் ராசி ராசிபலன் அதிர்ஷ்டம் ஜோதிடம் யோகம்

விருச்சிகம்
முயற்சித்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகரமாகண்டு மனம் தளராமல் முன்னேறுவீர்கள். சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். எதிரிகளின் சதி முறியடிக்கப்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

தனுசு
பங்குச்சந்தை மற்றும் இதர ஆபத்து நிறைந்த முதலீடுகளில் ஈடுபடும்போது மிகச்சிறந்த கவனமும் நிதானமும் தேவை. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இது அமைகிறது. தொழில் மற்றும் உத்தியோகப் பகுதியில் உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்கள் கைக்கு வந்து சேரும்.

மகரம்
உற்சாகமும் புது ஆற்றலும் நிறைந்த நாளாக இன்று உங்களுக்கு அமையும். குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் வரக்கூடும். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கும்பம்
நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பிறகு நீங்கள் எதிர்பார்த்த சில நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். திடீர் சந்திப்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.

மீனம்
புதிய வழிகளில் பணம் சம்பாதிக்கும் யுக்திகளைக் கண்டறிவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களிடையே சுமூகமான சூழலைத் தக்கவைக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எதிலும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை வழங்குவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு உங்களது மனதை லேசாக்கும்.