இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு... வார்த்தைகளில் மட்டும் நிதானத்தைக் கொண்டு வாங்க!

 
ராசி

இன்றைய ராசிபலன் (28 ஜூலை 2026)

மேஷம்
தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்; இருப்பினும் கைக்கு பணம் வந்து சேர்வதில் சிறிய தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் மூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் | அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம்

குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணவரவு தடையின்றி கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் | அதிர்ஷ்ட எண்: 1, 5

மிதுனம்

நண்பர்கள் மூலம் நல்ல செய்திகளும் நன்மைகளும் உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத பயணங்கள் அல்லது செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் | அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்

வரவேண்டிய நிலுவைப் பணம் சற்று இழுபறிக்குப் பின் வந்து சேரும். அரசியல் மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு மேலிடத்திலிருந்து நல்ல தகவல்கள் வரும். மாணவர்கள் கல்வியில் சிறக்கக் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் | அதிர்ஷ்ட எண்: 5, 6

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

சிம்மம்

சுப தேவைகளுக்காகச் சிறிய தொகையைக் கடனாக வாங்க நேரிடலாம். தொழில் ரீதியான புதிய தொடர்புகள் விரிவடையும். வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை | அதிர்ஷ்ட எண்: 1, 3

கன்னி

கொடுத்த வாக்கை நிறைவேற்றக் கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். தேவையில்லாத வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் விலகி இருப்பது அமைதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை | அதிர்ஷ்ட எண்: 1, 7

துலாம்

தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும் இனிய நாள். நிதி நிலைமை சீராகி மன மகிழ்ச்சியைத் தரும். கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம், வெள்ளை | அதிர்ஷ்ட எண்: 2, 6

விருச்சிகம்

உத்தியோகத்தில் எதிர்பாராத பணி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்கள் வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள் | அதிர்ஷ்ட எண்: 3, 9

ராசி விநாயகர்

தனுசு

மனதில் இருந்த தேவையற்ற பயமும் குழப்பமும் நீங்கித் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வர வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், தங்க நிறம் | அதிர்ஷ்ட எண்: 5, 8

மகரம்

திட்டமிட்ட பணிகளை நேரத்தில் முடிப்பதில் சில தடங்கல்கள் வரலாம். தேவையற்ற காரியங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு அசெளகரியங்கள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கருநீலம் | அதிர்ஷ்ட எண்: 4, 7

கும்பம்

நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன முக்கியமான வேலைகள் இன்று சுமுகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, பச்சை | அதிர்ஷ்ட எண்: 5, 8

மீனம்

தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு | அதிர்ஷ்ட எண்: 3, 6