இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு யோகம் உண்டு.. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க!
இன்று தமிழ் தேதி பங்குனி 13, விசுவாவசு வருடம்.
திதி: நவமி (பகல் 12:52 வரை), பின்னர் தசமி.
நட்சத்திரம்: புனர்பூசம் (மாலை 5:48 வரை), பின்னர் பூசம்.
யோகம்: சித்தயோகம்.
சந்திராஷ்டமம்: கேட்டை (மாலை 5:48 வரை), பின்னர் மூலம்.
மேஷம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். நவீனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களில் நிதானம் தேவை. பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் உற்சாகமான சூழல் நிலவும்.
மிதுனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொட்ட காரியங்கள் தடையின்றி முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

கடகம்
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். மாலை நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
சிம்மம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.
கன்னி
நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.
துலாம்
சமூக வட்டத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய மனிதர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். காதல் விஷயங்களில் நிதானம் தேவை.
விருச்சிகம்
சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

தனுசு
ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
மகரம்
தொழில் ரீதியான பயணங்கள் வெற்றியைத் தரும். இழுபறியாக இருந்த அரசு வழி காரியங்கள் சாதகமாக முடியும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.
கும்பம்
நிர்வாகத் திறமை வெளிப்படும் நாள். உத்தியோகத்தில் நிலவி வந்த நெருக்கடிகள் குறையும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்
பொருளாதார நிலை சீராக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.
