இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் சேரும்... பெரியோர்கள் ஆசி கூடுதல் யோகம் தரும்!

 
ராசி

இன்று 15 ஜூலை 2026, புதன்கிழமை இன்றைய திதி: மதியம் 02:24 வரை பிரதமை, அதன் பின் துவிதியை.

நட்சத்திரம்: நள்ளிரவு 02:20 வரை புனர்பூசம், பின்பு பூசம்.

யோகம்: அதிகாலை 05:59 வரை சித்தயோகம், பின்பு மரணயோகம்.

நல்ல நேரம்: முற்பகல் 11:30 - 12:00 | மாலை 04:45 - 05:45

ராகு காலம்: மதியம் 12:00 - 01:30

எமகண்டம்: காலை 07:30 - 09:00

சூலம்: வடக்கு (பரிகாரம்: பால்)

சந்திராஷ்டமம்: தனுசு ராசி (இன்று புதிய முயற்சிகள், பயணங்களைத் தவிர்க்கவும்).

மேஷம் 
இன்று அலுவலகத்திலோ அல்லது பொது இடங்களிலோ யாரைப் பற்றியும் புறம் பேசாமல் இருப்பது உங்கள் நற்பெயரைக் காக்கும். வெளியூர் அல்லது பயணங்களின் போது உங்களுடைய உடைமைகளை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வது அமைதியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9

ரிஷபம்
வியாபாரம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் மற்றவர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்ல பலனைத் தரும். உங்களது தனிப்பட்ட கருத்துகளுக்கு மற்றவர்கள் மத்தியில் பெரிய அளவில் மதிப்பு இருக்காது என்பதால் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் இன்று சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன்கள் அல்லது கட்டணங்களைச் செலுத்தி நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைக் கழிப்பீர்கள். பணியிடத்தில் உங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ நிறம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

சிம்மம் 
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். பெற்றோரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் சிலருக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுவது லாபத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, தங்கம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கன்னி 
இன்று நீங்கள் செய்யும் எந்தவொரு புதிய காரியமாக இருந்தாலும் தகுந்த பெரியோர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவிடம் விவாதித்துச் செய்வது நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த மந்தநிலை நீங்கி, சூடுபிடிக்கும். நிதி நெருக்கடிகள் படிப்படியாகத் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம் 
சக ஊழியர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், சொத்துத் தகராறுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் பெருமையளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

ராசி

விருச்சிகம் 
மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு 
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் நிலவுவதால், எதிலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. முன்னேற்றம் காண நீங்கள் வழக்கத்தை விடக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். எவ்வித முக்கிய முடிவுகளையும், அவசரத் திட்டங்களையும் இன்று எடுக்க வேண்டாம். உடன் இருப்பவர்களிடம் விவாதங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

மகரம் 
பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். புதிய முதலீடுகள் மூலம் லாபம் இரட்டிப்பாகும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் வெளியூர்ச் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், சாம்பல்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 8

கும்பம்
மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரப் போட்டிகளில் எதிரிகளைத் திறம்பட முறியடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் தொழிலுக்குப் பக்கபலமாக அமையும். வாகனப் பயணங்களின் போது போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 5, 8

மீனம்
குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் தொட்ட காரியங்கள் துலங்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நல்ல தகவல்கள் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். ஆன்மீகப் பயணங்களில் ஆர்வம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9