ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை... கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடாதீங்க!
ஐப்பசி மாதத் தொடக்கத்தில் சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. நவக்கிரகங்களும் தங்கள் இயக்கத்தால், ராசி நட்சத்திரம் என ஒவ்வொன்றாய் மாறிக் கொண்டே இருக்கின்றன. இதில், நவக்கிரகங்களின் அரசரான சூரியனின் பெயர்ச்சியே மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களிலும் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படத்தான் செய்கிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசிக்கு பெயர்ந்த சூரியன் அமோகமான பலன்களை அள்ளித் தரப் போகிறார். துலாம் ராசிப் பெயர்ச்சி, 6 ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தையும், 6 ராசிக்காரர்களுக்கு சவால்களையும் தரப்போகிறது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டங்களை பெறப் போகிறீர்கள். ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், கணிசமாக நல்ல பலன்களை பெறலாம். பொறுமையை கடைப்பிடித்தால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிட்டும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் உழைப்புக்கேற்ற பலன்களை பெறலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே ஐப்பசி மாதத்தில் சூரியன் பெயர்ச்சியால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். மனக்குழப்பங்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். பணியிடத்தில் கடின உழைப்பின் மூலமே பாராட்டுக்களை பெற இயலும். உடல் நலனில் சிறு பிரச்சனைகள் வந்து தீரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே சூரியன் பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கல்வி கேள்விகளில் மேன்மை அடையலாம். வரவுக்கேற்ற செலவு நிச்சயம். சுபச்செலவாக செய்து மகிழலாம். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்:
துலாம் ராசியினர்களே சூரியன் பெயர்ச்சியால் பெருமைப் பெறப் போகிறீர்கள். பிள்ளைகளால் நற்பலன்கள் உருவாகும். குடுமப்த்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே துலாம் ராசிக்கு சூரியன் பெயர்வதால் உற்சாகமான மனநிலையை பெறுவீர்கள். வியாபாரத்தில் பண இழப்பு ஏற்பட்டாலும், தன்னம்பிக்கையால் இழப்பை ஈடுகட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் புத்திசாலித்தனமான முடிவுகளால் சாதகமான பலன்களை பெறலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே ஐப்பசி மாதத்தில் நடைபெற போகும் சூரிய பெயர்ச்சியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் குடும்பத்தில் உற்சாகம் கூடும். பிள்ளைகளால் நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!