ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுமே மிக கவனமா இருங்க... யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க!
ஐப்பசி மாதத் தொடக்கத்தில் சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. நவக்கிரகங்களும் தங்கள் இயக்கத்தால், ராசி நட்சத்திரம் என ஒவ்வொன்றாய் மாறிக் கொண்டே இருக்கின்றன. இதில், நவக்கிரகங்களின் அரசரான சூரியனின் பெயர்ச்சியே மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களிலும் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படத்தான் செய்கிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசிக்கு பெயர்ந்த சூரியன் அமோகமான பலன்களை அள்ளித் தரப் போகிறார். துலாம் ராசிப் பெயர்ச்சி, 6 ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தையும், 6 ராசிக்காரர்களுக்கு சவால்களையும் தரப்போகிறது.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததால் காரியத் தடைகள் , காலதாமதம் ஏற்படலாம். தொழிலில் பின்னடைவை சந்திக்க நேரிடும். அதிக பணிச்சுமையால் சோர்வான மனநிலை ஏற்படும். உடல் நலனில் சிறு குறைபாடுகள் வந்து நீங்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களே துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததால் பணியில் இடமாற்றம் ஏற்படலாம். தொழிலில் புதிய முயற்சியால் அனுகூலமான பலன்களை பெறலாம். பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் ஏற்படப்போகும் திடீர் மாற்றங்களால் மனம் உற்சாகம் அடையும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. உழைப்புக்கேற்ற ஆதாயம் பெறலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே ஐப்பசி மாதத்தில் சூரியனின் பெயர்ச்சியால் தொழிலில் பெரும் நன்மைகளை அடையப் போகிறீர்கள். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே ஆறுதலை அள்ளித்தரப்போகும் காலகட்டம் இது. சூரியப் பெயர்ச்சி, தனுசு ராசியினருக்கு நல்ல வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையப் போகிறது. பணப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காரியத் தடைகள் வரலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே ஐப்பசி மாதத்தில் சூரிய பெயர்ச்சியால் நீண்ட கால பிரச்சனைகள் தீரப்போகிறது. குடும்பம், நண்பர்கள் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே ஐப்பசி மாதத்தில் சூரிய பெயர்ச்சியால் பொறுமை குறைவு ஏற்படலாம். வாக்குறுதிகளால் ஏமாற்றம் அடையலாம். உறவினர்களிடையே பேச்சில் நிதானம் அவசியம். வரவுக்கேற்ற செலவுகளும் வரிசைகட்டி வரலாம். இதனால் சுபச்செலவுகளாக அவைகளை மாற்றிக் கொள்வதால் ஆதாயம் பெறலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!