தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை.. டாஸ்மாக் கடைகள், பார்கள் 3 நாட்கள் மூட உத்தரவு!
தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழாக்களையொட்டி, மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தனியார் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தேதிகளில் மதுரை மாவட்டத்தில் எந்தவொரு டாஸ்மாக் கடைகளும், தனியார் பார்களும் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வருகை தரவுள்ளதால், இந்நிகழ்விற்கு மாநிலம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
