பயத்துல தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்... டிடிவி தினகரன் பளிச்!

தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அதிமுக -பாஜக கூட்டணி முதல் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றது வரை மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஏற்கனவே 2021வரை பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் தான் அவர். அரசியல் சூழல் காரணமாக பேசியதை திரும்பபெற்று மக்களுடைய நலனுக்காகவும் கட்சியினுடைய நலனுக்காகவும் இப்படி செய்யலாம் அதைப்போல தான் இதனை நான் பார்க்கிறேன்.
அடுத்ததாக பாஜக உட்கட்சி விவகாரத்தில் தலையிடுமா என்பது போல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர் ” எப்போதுமே அடுத்த கட்சி உட்கட்சி விவகாரம் குறித்து தலையிடமாட்டார்கள். தலையிடவும் முடியாது… தலையிடவும் கூடாது.
பன்னீர்செல்வம் ஏற்கனவே 24 தேர்தலில் மோடி வெற்றிபெறவேண்டும். மோடி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்பதற்காக கூட்டணியில் இருந்தார். மற்றபடி அமித்ஷா பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டார் என்றால் அந்த கேள்வியை நீங்கள் நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்கவேண்டும். ஏற்கனவே, இது போன்ற கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துவிட்டார்.
அடுத்ததாக நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்றது குறித்து ” கடந்த மூன்று ஆண்டுகளாக நண்பர் அண்ணாமலை அரசியல் செயல்பாடு என்பது சிறப்பாக இருந்தது. திமுகவுக்கு சொப்பனமாக விளங்கினார். புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நயினார் நாகேந்திரன் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை செயல்பாடு சிறப்பானது எனவே, அவரை கட்சியில் இருந்து ஒதுக்கவே முடியாது என்று பேசியிருந்தார்” எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ” நாங்கள் எல்லாம் அம்மாவுடைய தொண்டர்கள். அவரிடம் நாங்கள் அரசியலை கற்றுக்கொண்டோம் . அம்மாவுடைய அடுத்தகட்டமாக அரசியலை கொண்டு செல்லும் கழகமாக அம்மா கழகம் இருக்கிறது. பாஜக என்பது இந்தியா முழுவதும் ஆதிக்கத்தில் இருக்க கூடிய ஒரு கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருப்பதால் சட்டசபையில் பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்” எனவும் முகஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.