”10 லட்சம் கேட்டாங்க”.. மர்மமான முறையில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!!

 
2 வயது பெண் குழந்தை   மரணம்

2 வயது பெண் குழந்தை மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்ம் சாட்டி உள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 2வயது பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுக்குறித்து குழந்தையின் உறவினர்கள் தெரிவித்ததாவது, முதலில் சிகிச்சைக்காக ரூ. 10 லட்சம் கேட்டதாகவும், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய உடனே, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்கள் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை மர்மமான முறையில், இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. 

From around the web