மகளிர் உரிமைத் தொகை இனி இவர்களுக்கு கிடையாது... யார் யாருக்கு கட்? முதல்வர் அதிரடி!

 
மகளிர் உரிமைத் தொகை பணம் ரொக்கம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பணம் ரொக்கம் ரூபாய்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. தகுதியற்றவர்களை நீக்கி, உண்மையான ஏழைகளுக்குப் பலன் சென்றடைவதை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தற்போதைய திட்டத்தில் சில தகுதியற்ற நபர்களும் பயன் பெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புதிய அரசாணையின்படி கீழ்க்கண்ட மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.  பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற முறையில் இத்திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வருபவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

மகளிர் உரிமைத் தொகை

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு முன்னுரிமை: சொந்த வீடு இல்லாத, வாடகை வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய பெண்களுக்கு இத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய விதிகள் மாற்றப்பட உள்ளன. அரசின் நிதி உதவி மிகவும் தேவையுள்ள விளிம்புநிலை மக்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

திட்டத்தின் விதிகளை மறுசீரமைக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், மே மாதத்திற்கான உரிமைத் தொகை வழங்கப்படுவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மே மாதத்திற்கான ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணை மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரூபாய் சம்பளம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது இந்த மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்ட பிறகு, நிதி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.