காலை வெறும் வயிற்றில் இதையெல்லாம் செய்தா நீரிழிவு நோயே வராதாம்!!!

 
காலை வெறும் வயிற்றில் இதையெல்லாம் செய்தா நீரிழிவு நோயே வராதாம்!!!

உடல்நலக் குறைபாடு என்றாலே மனம் சார்ந்தது தான். மனம் தெளிவாக இருந்தாலே பாதி நோயை வென்று விட முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கு நாளின் காலையில் தூங்கி எழும் நேரம் மிக முக்கியமானது இந்த நேரத்தில் நம் உடல் எதை உணர்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

காலை எழுந்தவுடன் சிலர் அமிலத்தன்மையையும், சிலர் வயிறு வீக்கத்தையும், சிலர் ஆற்றல் குறைவாகவும் உணர்கிறார்கள். இவை எல்லாமே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளே. தூக்கத்தில் தொடர்ந்து பல மணிநேரங்களுக்கு தண்ணீர் இல்லாமல் இருந்திருக்கிறோம். இதனால் காலை தூங்கி எழுந்ததும் முதலில் செய்ய வேண்டியது வெதுவெதுப்பான குடிநீர்.

காலை வெறும் வயிற்றில் இதையெல்லாம் செய்தா நீரிழிவு நோயே வராதாம்!!!

சர்க்கரை நோயாளிகள் இத்துடன் கறிவேப்பிலை, துளசியை சேர்த்து அரைத்து அந்த தண்ணீரை பருகலாம். இதன் மூலம் அன்றைய நாள் முழுவதுமே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

எழுந்ததும் நெஞ்செரிச்சலை உணர்ந்தால் இரவு உணவு தாமதமாக சாப்பிட்டதன் வெளிப்பாடு. தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரம் முன்னாலேயே சாப்பிட வேண்டும்.

காலை வெறும் வயிற்றில் இதையெல்லாம் செய்தா நீரிழிவு நோயே வராதாம்!!!

வெறும் வயிற்றில் 10 கருப்பு திராட்சையை ஊறவைத்து சாப்பிடலாம். அமிலத் தன்மையை உணர்பவர்கள் 1 டீஸ்பூன் சீரகம், 1 ஏலக்காய், 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 1 ஸ்பூன் ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பாதியாக குறைந்ததும் வெதுவெதுப்பாக குடிக்கலாம்.

காலையில் டீ அல்லது காபி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காலை நேரத்தை எளிமையாகவும், அமைதியாகவும் அமைத்து கொள்ள வேண்டும்.

தியானம் செய்யலாம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மன அழுத்தத்தை உருவாக்கும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

From around the web