திருச்செந்தூர் சென்ற ஆம்னி பேருந்து திடீர் கவிழ்ந்து விபத்து!

 
ஆம்னி

 

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கோயம்புத்தூரில் இருந்து 6 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பவர் ஓட்டி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இன்று காலை தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், பேருந்தில் பயணம் செய்த 6 பேருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மாற்றுப் பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சாலையில் கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து எந்த காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.