திருச்செந்தூரில் மூத்த குடிமக்கள் உதவியாளர் ஒருவரை அழைத்து செல்ல அனுமதி... உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அனைத்து வரிசை பக்தர்களுக்கும் சமமான மற்றும் நியாயமான தரிசன வாய்ப்பினை ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள் சிறப்புத் தரிசன வரிசையில் செல்லும் போது, அவர்களுடன் ஒருவரை மட்டுமே உதவியாளராக அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு பக்தர்களுக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி விரைவாகவும் எளிதாகவும் சாமி தரிசனம் செய்வதற்கான உரிய ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது