அண்ணாமலையாருக்கு அரோகரா... கோஷத்துடன் திருக்கல்யாணம்... குவிந்த பக்தர்கள்!

 
அண்ணாமலையார்
 

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இருக்கும் கருவறையில் உள்ள போக சக்தி அம்மனுக்கு தாலி கட்டும் நிகழ்வு இன்று மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான உண்ணாமலை அம்மன் குமர கோயிலுக்கு எழுந்தருளி சீர்வரிசையுடன் அண்ணாமலையார் ஆலயத்திற்கு இன்று மாலை வந்தவுடன் அண்ணாமலையார் ஆலயத்தில் சம்பந்த விநாயகர் சன்னதியில் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனும் எதிரெதிரே தோன்றி மாலை மாற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை

தொடர்ந்து சாமிக்கும் அம்மனுக்கும் பூ பந்து மாற்றும் நிகழ்வு கோளாகாலமாக நடைபெற்ற நிலையில் சுவாமியும் அன்பாலும் ஆனந்த நடனமாடு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி உத்திர நட்சத்திரத்தில் சரியாக நள்ளிரவு.. திருமாங்கல்யம் சாத்தும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்

திருவண்ணாமலை

அதனைத் தொடர்ந்து தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனும் நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள் மாடு வீதி வரும்போது பௌர்ணமிக்கு கிரிவலம் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் அரோகரா கோஷத்துடன் அண்ணாமலையார் மாட வீதி வந்து திருக்கோயிலை அடைந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web