"திருமா எங்களுக்குத் தாய் சிறுத்தை... விசிக கூட்டணியின் தூண்" - அமைச்சர் ராஜ்மோகன்

 
அமைச்சர் ராஜ்மோகன்

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு வலிமையான தூண் போலச் செயல்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக மற்றும் விசிக இடையேயான கூட்டணி மிக உறுதியாகவும் பலமாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டார். விசிக தலைவர் தொல். திருமாவளவன் தங்களுக்கு "தாய் சிறுத்தை" என்றும், அவரும் முதல்வர் விஜய்யும் இணைந்துள்ளது ஒரு கொள்கைக் கூட்டணி என்றும் தெரிவித்தார்.

திருமா

முதல்வரின் அரசியல் அணுகுமுறையைப் பாராட்டிய அமைச்சர் ராஜ்மோகன், பிரதமர் மோடியுடனான சந்திப்பு தமிழக முதல்வர் என்ற ரீதியிலான அதிகாரப்பூர்வ சந்திப்பு என்றும், ராகுல் காந்தியுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்றும் விளக்கமளித்தார். முதல்வரின் இந்த நாகரிக அரசியலை மற்ற தலைவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.