“திருமாவளவன் முதல்வராக வேண்டும்” - அமைச்சர் வன்னி அரசு!

 
வன்னி அரசு

அவரவர் தலைவர்களை அவர்தம் தொண்டர்கள் கொண்டாடுவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள பல்வேறு விவாதங்கள் மற்றும் கருத்துகளுக்கு இடையே அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

வன்னி

தற்போதைய அரசியல் சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை எதிர்காலத்தில் நாட்டின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கூறி வருவது குறித்தும், அது தொடர்பான கேள்விகளுக்கும் அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஜனநாயக நாட்டில் அவரவர் தலைவர்களை அந்தந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாடுவதும், உயர்த்திப் பிடிப்பதும் இயல்பான ஒன்றுதான் என்றும், அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு தொண்டருக்கும் தங்கள் தலைவர் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பது இயற்கையானது தான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

விசிக வன்னி அரசு

இதனுடன் சேர்த்துப் பேசுகையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, தங்களைப் பொறுத்தவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தொல். திருமாவளவன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் தங்களது கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர்களின் நீண்ட கால எண்ணமும் விருப்பமுமாகும் என்று அமைச்சர் வன்னி அரசு தெளிவுபடுத்தினார். தங்களது இலட்சியத்தையும் தலைவரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு தாங்கள் தொடர்ந்து இதையே பேசி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.