திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுங்கள்... உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்!

 
திருப்பரங்குன்றம்

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் எனப் பிறப்பித்த உச்சநீதிமன்ற உத்தரவை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

திருப்பரங்குன்றம் கல்தூண்

அப்போது அரசுத் தரப்பில், 144 தடை உத்தரவு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுவதற்காகப் பிறப்பிக்கப்படவில்லை என்றும், மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, கல் தூண் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு நிலுவையில் உள்ளது.

திருப்பரங்குன்றம்

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில்தான் தீபம் ஏற்றக் கோருகிறோம் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைத் தவிர்க்கத் திருப்பரங்குன்றம் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்