திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்... பலத்த போலீஸ் பாதுகாப்பு - தீபம் ஏற்றப்படுவதில் சந்தேகம்!

 
திருப்பரங்குன்றம்

 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்துப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

இதனிடையே, உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமாக ஏற்றப்படும் தீபத்திற்கான தாமிரக் கொப்பரைக்குப் பூஜைகள் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வியும் சந்தேகமும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.