திருப்பதியில் ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை!

 
திருப்பதி

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 81,553 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ.4.17 கோடி வசூலாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

மேலும், இச்சமயத்தில் 34 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தங்களது முடி காணிக்கையைச் செலுத்தியுள்ளனர். இலவச தரிசனத்திற்கான வரிசை சிலாதோரணம் வரை நீண்டுள்ளதால், டோக்கன் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை

கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது